கலங்கரை விளக்காய்!
கலங்கரை விளக்காய்!


கலங்கரை விளக்காய்!
+++++++++++++
நசநசவென விடாத மழை...
கிடுகிடுவென அதட்டும் இடிமுழக்கம்!
தேய்ந்துபோன
தேய்பிறை நிலவை
தேய்த்துத் தீர்க்கின்றன கார்மேகங்கள்!
குடிசை வாசலில்
மறுநிலவாய் மெல்லத் தலைநீட்டினாள் அவள்;
அங்கே,
கடல் அலைகள் மழையோடு கைகோர்த்து
ராட்சத ராகம் பாடி கரைமோதின!
உப்புக் காற்றில் கணவன் கரைசேரும் வரை,
அணையாத கலங்கரை விளக்காய் அவள்...
அசையாமல் நின்றாள்—
தன் விழிகளையே ஒளியாக்கி!
++++++++++++++++++