உக்கிரப்போர்
உக்கிரப்போர்


உக்கிரப் போர்
##############
ஆடி ஆஃபரில் வாங்கிய Fan
கோடையின் கொடு வெப்பம் தாளாது
டிஸ்கவுண்டில் கொஞ்சமாய்
மூச்சிரைத்து சுழல
நடு இரவில்
அக்னி நட்சத்திரம்
வானில் எங்கு இருக்கிறது
என ஜன்னல் வழியே
எட்டிப் பார்த்து மனம் குழம்பி
உறக்கம் வராமல்
படுக்கையிலேயே
அங்கப் பிரதட்சணம் செய்து கொண்டிருக்க
அணைக்கட்டில் திறந்து விட்ட
வெள்ளமாய் வியர்வை
உடம்பெங்கும் ஊற்றெடுக்க
ஐந்து நிமிடத்திற்கு ஒரு தடவை
முகம் அலம்பி கை அலம்பி
வெயிலை நினைத்து புலம்பி
circadian rhythm மாறி
இரவுத் தூக்கம் தொலைந்து போக
எங்கேயோ இருந்த வருண பகவான்
சடசட படபட வென வந்து
மடமட வென போய்விட்டாலும்
ஜஸ்ட் பாஸ் மார்க் வாங்கி
உக்கிரம் குறைத்து
உள்ளம் குளிர வைத்து விட்டார்
கோடை மழை..
குடை வேண்டா
கொடை மழை...
விடாதே வருண பகவானே!
Trump போல் பேச்சுவார்த்தை நடத்தியாவது
இந்த சூரிய பகவானிடம் இருந்து
ஒவ்வொரு சம்மருக்கும்
விடுதலை வாங்கி தா !
நீ மட்டும் தான் இப்போது
எங்களுக்கு இருக்கும் ஒரே
டிரம்(ப்) கார்ட்
சூரிய பகவான்: ஞாயிறு போற்றுதும்!
வருண பகவான்: ம்.. ..ஹீம்...
மாமழை போற்றுதும்!!
மக்கள்: தொடரட்டும் போர்.....
-மூர்த்தி நடராஜன்
"நடு இரவில் பெய்த மழைக்கு நன்றி! 17May25!"
மற்றபடி கவிதைக்கும் போருக்கும் சம்பந்தமில்லை
###############
