Add your promotional text...

விதிவிலக்கு

விதிவிலக்கு

Nadaraja Moorthy

5/31/20261 min read

விதிவிலக்கு

###########

எல்லா நாளுமே ஆயுத பூஜை தான்

பொரி, கடலை, சுண்டல் விற்கும்

தள்ளுவண்டியில்....

திருநீறு, சந்தனம் குங்குமமெல்லாம்

பளிச்சென்று குடி கொண்டிருக்கும்

கடையில் உள்ள பாத்திரங்களிலும் கடைக்காரரின் நெற்றியிலும்..

தேடி வந்து சாப்பிடும் கஷ்டமர்கள்

ஆயுத பூஜை அன்று அவரவர் வீட்டிலேயே ஐக்கியமாகி விடுவதால்

ஆண்டுக்கு ஒரு முறை

அந்த தள்ளு வண்டிக்கு

ஆயுத பூஜை அன்று விடுமுறை

சடங்கு போல இருக்கும் சக்கரங்கள்

கடைக்காரரின் வாழ்க்கையைப் போல நகராமலேயே இருக்க

காற்று இல்லாத டயர்கள்

சங்கிலியால் பிணைக்கப்பட்டு

பூட்டுப் போட்டு

தார்ப்பாய் மூடியிருக்க,

கடையின் மேற்புற கம்பியில்

அமர்ந்து காகம் ஒன்று கரைந்து கொண்டிருக்க

கடைக்காரரின் வரவுக்காக

காத்திருந்தது தள்ளுவண்டி ....

#மூர்த்தி நடராஜன்

01Oct2025